கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு இயற்றியது. இந்த சட்டத்தின் கீழ், 100 நாள் வேலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கர்நாடகாவில் 100 நாள் வேலைத்திட்டத்தில் ஆண்களுக்கு சேலை உடுத்தி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதையடுத்து 100 நாள் வேலையில் முறைகேட்டில் ஈடுபட்ட பஞ்சாயத்து அதிகாரி வீரேஷ் பணியிடை நீக்கம் செய்ப்பட்டார். இந்த சம்பவம் கடந்த பிப்ரவரியில் நடந்துள்ளது.