மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் முகமது அஸ்கர் அலி என்பவர் பாஜக சிறுபான்மையினர் பிரிவு தலைவராக உள்ளார். இவரது வீடு தவுபால் மாவட்டம் லிலாங் சட்டப் பேரவைத் தொகுதியின் சம்ப்ருகோங் மேமேய் பகுதியில் அமைந்துள்ளது.
அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு மசோதா, சட்டத்துக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் முகமது அஸ்கர் அலி கருத்துகளைப் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், அவரது வீட்டை மர்மநபர்கள் சிலர் தீவைத்து எரித்தனர்.
அவரது வீட்டில் யாரும் இல்லாததால் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து வந்து கும்பலை விரட்டியடித்தனர். இதைத் தொடர்ந்து அங்கு 144 தடையுத்தரவை ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.