Friday, August 22, 2025
HTML tutorial

“அரசு வேலையை மட்டுமே நம்பி இருக்காதீர்கள்” : புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி தனியார் பொறியில் கல்லூரியில் மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி வேலை வாய்ப்பு முகாம் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பல்வேறு பணிகளுக்கான ஆணைகளை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி

மாணவர்கள் படித்துவிட்டு அரசு வேலையை மட்டுமே நம்பி இருக்காமல் புதிய தொழில் தொடங்க முன் வர வேண்டும், புதிய தொழில்களை தொடங்கும் போது தான் பலருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையோடு படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

புதுச்சேரியில் புதிய தொழில்களை தொடங்குவதற்கான வாய்ப்புகளை அரசு உருவாக்கி உள்ளது, அதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், புதுச்சேரி அரசால் நடத்தக்கூடிய எல்டிசி, யூடிசி தேர்வுகளுக்கு பிடெக், எம்டெக், படித்த மாணவர்கள் போட்டியிடுகின்றனர், படிப்பிற்கு தகுந்தாற்போல் புதிய தொழில்களை தொடங்கும் மாணவர்கள் முன்வர வேண்டும். புதிய தொழில்களை தொடங்கும் போது நாடும் வளர்ச்சி அடையும் நமது மாநிலமும் வளர்ச்சி அடையும் என்று அவர் குறிப்பிட்டார்.

விழாவில் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் செயலாளர் நாராயணசாமி உள்ளிட்ட பேராசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News