Saturday, April 5, 2025

பைக்கில் இருந்த பாம்பு கடித்து இளைஞர் பலி

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் என்பவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கின் முன்பகுதியில் இருந்து பாம்பு ஒன்று வெளியே வந்துள்ளது.

இதையடுத்து பைக்கை நிறுத்தியபோது பாம்பு அவரை கடித்துள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஹரிகிருஷ்ணன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest news