கோவையில் இருசக்கர வாகனத்தில் கையில் பீர் பாட்டிலுடன் ரகளையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை 100 அடி சாலையில் இருந்து நவஇந்தியா நோக்கி செல்லும் மேம்பாலத்தில் ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பீர் பாட்டில்களுடன் சென்றனர். அவர்கள் எதிரே வாகனங்களில் வந்தவர்களை மிரட்டியபடி அச்சுறுத்தும் வகையிலும் சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதை அறிந்த காட்டூர் காவல் துறையினர் அவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், மேம்பாலத்தில் ரகளையில் ஈடுபட்ட ராஜ்குமார், சுசீந்திரன் மற்றும் கௌதம் ஆகிய மூன்று பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.