மார்ச் 22ம் தேதி மாலை 6 மணிக்கு IPL தொடக்கவிழா கோலாகலமாக, கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த தொடரினை பொறுத்தவரை கோப்பை வெல்லும் அணி, அடுத்த சீஸனின் முதல் போட்டியை தங்களது சொந்த மைதானத்தில் விளையாடுவர்.
அந்தவகையில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பு தொடரின் முதல் போட்டியை சொந்த மைதானமான ஈடன் கார்டனில் விளையாட உள்ளனர். அஜிங்கியா ரஹானே தலைமையிலான KKR ரஜத் படிதாரின் RCBயை எதிர்கொள்கிறது.
இந்தநிலையில் முதல் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்படலாம் என்று, தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்திய வானிலை மையம், ”மார்ச் 22ம் தேதி இடியுடன் கூடிய மழை கொல்கத்தாவில் பெய்யும். பலத்த காற்றும் வீசக்கூடும்,” என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொல்கத்தா வானிலை மையமும், ”மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவின் சில பகுதியில் கனமழை செய்யும். இதனால், சில பகுதிகளில் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்று, மழை, இடி, மின்னல் இருக்கும்,” என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக 22ம் தேதி மாலை மழைக்கு 90 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் கொல்கத்தா- பெங்களூரு போட்டி திட்டமிட்டபடி நடக்குமா?, இல்லை மழையால் ரத்து செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
முன்னதாக ராமநவமியான ஏப்ரல் 6ம் தேதி, ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கவிருந்த ராஜஸ்தான்-லக்னோ இடையிலான போட்டியை, பாதுகாப்பு காரணங்களால் கவுகாத்தி மைதானத்திற்கு BCCI மாற்றி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.