2004 முதல் 2009ஆம் ஆண்டு வரை அப்போதைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் லாலு பிரசாத் யாதவ், மத்திய ரயில்வே துறை அமைச்சராக பதவி வகித்தார். இந்த காலகட்டத்தில் ரயில்வே துறையில் குரூப் டி பதவிக்கு உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டது.
நிலம் வழங்கினால் ரயில்வே துறையில் வேலை வழங்கப்படும் எனக் கூறி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த மோசடி வழக்கில் லாலு பிரசாத் யாதவின் மனைவிராப்ரி தேவி ,மகள் மிசா பார்தி உள்ளிட்டோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் லாலு பிரசாத் யாதவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. பாட்னாவில் உள்ள அலுவலகத்தில் லாலு மற்றும் அவரது குடும்பத்தினர் நாளை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளது.