Wednesday, March 12, 2025

குடும்பத் தலைவிகளுக்கு குட் நியூஸ் : மாதந்தோறும் ரூ.2500 வரப்போகுது

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2500 வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில், முதலமைச்சர் ரங்கசாமி 2025-2026 ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அப்போது, அனைத்து விவசாயிகளுக்கும் மழைகால நிவாரணமாக 2 ஆயிரம்ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அனைத்து அட்டைகளுக்கும் 2 கிலோ இலவச கோதுமை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். மீனவ பெண்கள் உயிரிழந்தால் ஈமச்சடங்குக்காக வழங்கப்படும் நிதி 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாக ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

புதுச்சேரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களும் மதிய உணவில் முட்டை வழங்கப்படும் என்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வரும் ஆண்டு முதல் 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றும், கிழக்கு கடற்கரை சாலையில் புதிதாக அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் வைக்கப்படும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

Latest news