கிரிக்கெட் போட்டிகள் மூலம் மது. புகையிலை தொடர்பான விளம்பரங்களை அனுமதிக்க கூடாது என பாமக எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதையடுத்து மது, புகையிலை தொடர்பான விளம்பரங்களை அனுமதிக்கக் கூடாது என்று ஐ.பி.எல் நிர்வாகத்திற்கு மத்திய அரசு ஆணையிட்டுள்ளது.
இந்நிலையில் புகையிலை தொடர்பான விளம்பரங்களை ஐ.பி.எல் அமைப்பு தடை செய்ய வேண்டும் என எங்களின் கருத்தை மத்திய அரசும் வலியுறுத்தியிருப்பது பாமகவின் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.