Wednesday, March 12, 2025

பூட்டியே கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலையம் – பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

திருச்சியில் உரிய பராமரிப்பின்றி பூட்டியே கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தை, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே காமலாபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. தற்போது பணியாளர் இல்லாததால் ஆரம்ப சுகாதார நிலையம், உரிய பராமரிப்பின்றி பூட்டியே கிடக்கிறது.

இதனால் தொட்டியம் அல்லது மேக்கநாயக்கன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று, சிகிச்சை பெறும் நிலைக்கு, கர்ப்பிணி பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இதனை கவனத்தில் கொண்டு ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest news