Tuesday, January 13, 2026

தலைகீழாக நின்று கோஷம் எழுப்பிய நபர் : மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே உள்ள பல்லகச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர், மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு, தலைகீழாக நின்று, தங்கள் கிராமத்தில் உள்ள மரங்களை வெட்டி வீழ்த்திய நபர்கள் மீதும், ஏரியில் மண் வெட்டி எடுத்த நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷங்களை எழுப்பினார்.

உடனடியாக அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related News

Latest News