Tuesday, December 23, 2025

கோத்ரேஜ் ஆலையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு இன்று வருகை தரும் முதலமைச்சர் ஸ்டாலின், பையனூர் சிப்காட்டில் கோத்ரேஜ் ஆலையை திறந்து வைக்கிறார். 515 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் கோத்ரேஜ் ஆலை மூலம் ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இதனைத் தொடர்ந்து, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சி துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட 25 துறைகளில், 47 ஆயிரத்து 749 பேருக்கு 389.53 கோடி மதிப்பில் பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்குகிறார்.

Related News

Latest News