Saturday, December 27, 2025

பாமக துண்டுடன் சாதி ரீதியிலான பாடலுக்கு நடனமாடிய மாணவர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் அருகே உள்ள சோமனூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.

பள்ளி ஆண்டு விழாவில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் மாணவர்கள் சாதிரீதியான பாடலுக்கு பாமக துண்டை கழுத்தில் அணிந்தவாறு நடனமாடினர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நிழச்சிக்கு வந்த மற்ற மாணவர்களின் பெற்றோர்கள் இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உடனடியாக பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கூறினர். இதையடுத்து உரிய விசாரணை நடத்தித் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related News

Latest News