Saturday, December 27, 2025

ஹோலி பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி – மும்பை இடையே சிறப்பு ரயில்

ஹோலி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை சமாளிக்கவும் கன்னியாகுமரி – மும்பை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வட மாநிலங்களில் மார்ச் 14ம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தென் மாநிலங்களில் தங்கி இருக்கும் வட மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய உள்ளதால் கன்னியாகுமரி மற்றும் மும்பை இடையே சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

Related News

Latest News