Wednesday, March 12, 2025

8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : 63 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை

தஞ்சையில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 63 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் வசித்து வந்த சேஷாச்சலம் என்ற 63 வயது முதியவர் தனது வீட்டின் அருகில் வசித்து வந்த எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு புகார் அளித்தார்.

புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார், போக்சோ வழக்கு பதிவு செய்து சேஷாச்சலத்தை கைது செய்தனர். இது குறித்த வழக்கு தஞ்சை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்,
வழக்கை விசாரித்த நீதிபதி, 63 வயதான குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 15,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Latest news