பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக ‘வாட்ஸ் அப்’ குழுவை உருவாக்க தமிழக ரயில்வே போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மின்சார ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகள், சிறு தொழிலில் ஈடுபடும் திண்பண்ட வியாபாரிகள், வேலை நிமித்தமாக தினமும் பயணிக்கும் பெண்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து பகுதி வாரியாக புதிய வாட்ஸ் அப் குழுவை தொடக்க ரயில்வே போலீஸ் முடிவு செய்துள்ளது.
பெண் பயணிகளுக்கு ஏற்படும் தொந்தரவு, செல்போன் மற்றும் செயின் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிய, இந்த வாட்ஸ் அப் குழு பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தினமும் ரயில்களில் பயணிக்கும் பெண் பயணிகள், குழுவில் இணைக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.