கரூர் மாவட்டத்தில், கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள பள்ளியில் மாணவி ஒருவர் 10ம் வகுப்பு படித்துவந்துள்ளார். இவருக்கு அதே பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அந்த மாணவனை சந்திப்பதற்காக மாணவி சென்றநிலையில், பத்தாம் வகுப்பு மாணவி கழுத்து அறுபட்ட நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து அந்த மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து அந்த மாணவனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் அவனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அந்த மாணவி தன்னை இழிவாக பேசியதால் மாணவியை தாக்கியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.