Sunday, March 16, 2025

LED பல்பை விழுங்கிய 3 வயது சிறுவன் : வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்

நெல்லையில் 3 வயது சிறுவனின் மூச்சுக்குழாயில் சிக்கிய LED பல்பை அரசு மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

தூத்துக்குடியை சேர்ந்த தம்பதியின் 3 வயது மகன், விளையாடும் போது எதிர்பாராதவிதமாக LED பல்பை விழுங்கியுள்ளான். இது சிறுவனின் வலது மூச்சுக்குழாயில் சிக்கியதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதனையடுத்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிறுவன் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், Rigid Bronchoscopy என்ற நவீன அறுவை சிகிச்சை மூலம், வெறும் 20 நிமிடத்தில் மூச்சுக்குழாயில் சிக்கிய LED பல்பை அரசு மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

Latest news