சென்னை தாம்பரம் பேருந்து நிலையம் அருகே நடுரோட்டில் ரகளை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தாம்பரம் பேருந்து நிலையம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விசாரணை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக காரில் வந்தவர்கள் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை தாக்கியுள்ளனர்.
அந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது வழியிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.