Sunday, August 31, 2025
HTML tutorial

ஓடும் பேருந்தில் செல்போன் மற்றும் பணம் பறித்த நான்கு பெண்கள் கைது

சேலத்தில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் இருந்து செல்போன் மற்றும் பணம் பறித்த நான்கு பெண்களை போலீசார் கைது செய்தனர்.

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கருப்பூர் செல்ல டவுன் பேருந்தில் மங்கையர்கரசி என்பவர் ஏறியுள்ளார். அப்போது, பேருந்தில் கூட்டமாக அதிகமாக இருந்ததால், நான்கு பெண்கள், மங்கையர்கரசியை நோட்டமிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, மங்கையர்கரசியை சுற்றிவளைத்த அவர்கள், மங்கையர்கரசிடம் இருந்த செல்போன் மற்றும் 500 ரூபாயை அபேஸ் செய்துள்ளனர்.

இதனை பார்த்த மங்கையர்கரசி சத்தம் போட்டுள்ளார். உடனடியாக, பேருந்தில் இருந்த பயணிகள் அந்த கும்பலை பிடித்தனர். இதுகுறித்து, கருப்பூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்களை கைது செய்தனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News