உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா மிகவும் கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் மகா கும்பமேளாவுக்கு கிளம்பிய பக்தர்கள், ரெயில் பெட்டிகளில் இடம் கிடைக்காமல் ரெயில் என்ஜின் பெட்டிக்குள் பக்தர்கள் ஏறி அமர்ந்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி கான்ட் ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. சுமார் 20 ஆண்களும் பெண்களும் என்ஜின் பெட்டியை ஆக்கிரமித்திருப்பது கேமராவில் பதிவாகி உள்ளது.