இந்தோனேசியாவில் நிலச்சரிவு : 20 பேர் பலி

இந்தோனேசியா நாட்டின் முக்கிய தீவான ஜாவாவில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அங்கு நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தொடர் கனமழையால் மண், பாறைகள் மற்றும் மரங்கள் இடிந்து விழுந்து பல கிராமங்களில் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன. இந்த நிலச்சரிவில் இருந்து தப்பித்த 11 பேர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Related News

Latest News