Thursday, December 25, 2025

திருவண்ணாமலை : அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால், நோயாளிகள் சிரமம்

செங்கம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால், நோயாளிகள் சிரமம் அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு தலைமை மருத்துவமனைக்கு, தினமும் ஏராளமான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். தினமும் 15 மருத்துவர்கள் பணிபுரியவேண்டிய இந்த மருத்துவமனையில், 2 மருத்துவர்கள் மட்டுமே சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகின்றனர்.

அதிநவீன படுக்கை வசதிகள் இருந்தும், காட்சிபொருளாகவே இருப்பதால் நோயாளிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.

Related News

Latest News