Wednesday, February 5, 2025

ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட BSNL ஊழியர்

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள மொராய்ஸ் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (36). இவரது மனைவி காயத்ரி. இவர் திருச்சி பிஎஸ்என்எல் அலுவலக கேண்டினில் பணியாற்றி வந்தார். தற்போது அந்த கேண்டின் மூடிவிட்டதால் சம்பளம் இல்லாமல் பணிக்கு சென்று வந்துள்ளார்.

இதற்கிடையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதனால் மன உளைச்சலில் இருந்த கோகுலகிருஷ்ணன் புத்தாண்டு அன்று மனைவியுடன் போனில் பேசியுள்ளார். அப்போது மனைவி சரிவர பேசாததால் மனம் உடைந்த கோகுலகிருஷ்ணன் இன்று இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டார்.

திருச்சி- சென்னை ரயில் வழித் தடத்தில் திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் உத்தமர் கோவில் அருகே வந்தே பாரத் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த திருச்சி ஜங்ஷன் ரயில்வே போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து இறந்த கோகுலகிருஷ்ணனின் தாயார் சூரியகலா (63) அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Latest news