Wednesday, December 24, 2025

கோவையில் கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து..!!

கேரள மாநிலம் கொச்சின் பகுதியில் இருந்து எல்பிஜி கேஸ் ஏற்றி வந்த பாரத் டேங்கர் லாரி, உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் மீது ஏறி காந்திபுரம் நோக்கி திரும்பும் பொழுது லாரியிலிருந்த கேஸ் நிரம்பியுள்ள டேங்கர் மட்டும் கழன்று விழுந்துள்ளது. அதில் சேதம் ஏற்பட்டு கேஸ் வெளியேறி உள்ளது.

உடனடியாக லாரியில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து வாயு வெளியேற்றத்தை கட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர். காவல்துறையினர் மேம்பாலத்தில் போக்குவரத்தை தடை செய்து போக்குவரத்தை மாற்று பாதையில் திருப்பி விட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் கேஸ் நிறுவன பொறியாளர்கள் என பலரும் வந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அதிகாலை நடந்த இந்த விபத்தால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ள நிலையில் கிரேன் போன்ற வாகனங்களும் கொண்டுவரப்பட்டுள்ளது.

Related News

Latest News