Wednesday, February 5, 2025

திமுக அரசை விமர்சித்த காவலர் பணியிடை நீக்கம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசை விமர்சனம் செய்த காவலர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் காவலராக பணிபுரியும் அன்பரசன் என்பவர் மாணவி வன்கொடுமை விவகாரத்தில் “மானங்கெட்ட திமுக அரசு” என விமர்சனம் செய்துள்ளார். இதையடுத்து சீருடை பணி விதிகளை மீறியதாக அவர் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் முகநூலில் பதிவிட்ட பதிவும் நீக்கப்பட்டது.

Latest news