கரூரில், அரசுப் பள்ளிக்குள் புகுந்து மாணவனை வெறிநாய் கடித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் சுற்றி திரியும் வெறிநாய் ஒன்று இந்த பள்ளி வளாகத்திற்குள் புகுந்து 8 ஆம் வகுப்பு மாணவன் தரணீஸ் என்பரை கடித்ததாக கூறப்படுகிறது.
இதே போன்று பள்ளியின் அருகில் உள்ள சிவானந்த தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அஞ்சனா என்கின்ற இரண்டரை வயது சிறுமி, வெங்கடேஷ், சத்யா என்பவரின் நாயையும் வெறிநாய் கடித்துள்ளது. இது குறித்து புகார்கள் எழுந்த நிலையில், வெறி நாயை தேடி பிடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.