Wednesday, February 5, 2025

வங்கி ஊழியரை வெட்டியது ஏன்? விசாரணையில் வெளிவந்த தகவல்

சென்னை தி.நகர் பர்கிட் சாலையில் உள்ள எச்.டி.எஃப்.சி வங்கியில் தினேஷ் என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வங்கி வாடிக்கையாளர் போல உள்ளே நுழைந்து ஊழியரை அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதில் தினேஷின் காதில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சக ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதல் நடத்திய நபரை அருகில் இருந்தவர்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

ஊழியரை தாக்கிய அந்த நபரின் பெயர் சதீஷ் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நந்தனம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் தினேஷ், சதீஷ் இருவரும் வேலை பார்த்து வந்துள்ளனர். ஒழுங்கீன நடவடிக்கை காரணமாக சதீஷ் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு தினேஷ் தான் காரணம் என்றும் அதற்கு பழிவாங்கவே தினேஷை தாக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Latest news