Sunday, December 22, 2024

சென்னையிலிருந்து மதுரைக்கு இரவு நேர விமான சேவை அறிமுகம்

சென்னை இருந்து மதுரைக்கு நாளை முதல் இரவு நேரம் விமான சேவை தொடங்கப்பட உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

சென்னை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து மதுரைக்கு தினசரி காலையில் ஆரம்பித்து இரவு 9 மணிக்குள் விமான சேவை முடிவடைகிறது. இதனால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். இதனிடையே, சென்னையை போல மதுரை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து இரவு நேரத்திலும் விமானங்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், சென்னையில் இருந்து மதுரைக்கு இடையிலான இரவு நேர விமான சேவை நாளை முதல் தொடங்கவுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் சிறிய வகை A.D.R விமானங்கள் இரவு 10:30 மணிக்கு மதுரை சர்வதேச விமான நிலையம் சென்றடையும் என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Latest news