தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தங்கியிருந்த போது அவரது காரில் இருந்தும் அவரது உதவியாளரிடமிருந்தும் தடை செய்யப்பட்ட 2.5 கிலோ கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சவுக்கு சங்கர் ஆஜராகாததால் அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் யூடியுபர் சவுக்கு சங்கருக்கு 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.