Tuesday, July 1, 2025

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் அங்கு சிறப்பு அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மாத் வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையயடுத்து அங்கு சென்ற பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்புப்படையினர்க்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news