Wednesday, January 14, 2026

போன் அடிக்கடி ஹீட் ஆகுதா? இதெல்லாம் தான் காரணம் ..உடனே இத மாத்துங்க.

பொதுவாக போன் ஹீட் ஆவதற்கு அநேகமான காரணங்கள் இருக்கின்றது. சூரிய வெளிச்சத்திற்கு நேராக வைப்பது, வெப்பமான இடத்தில் வைப்பது, சரியான காற்றோட்டம் இல்லாத இடங்களில் வைப்பது போன்றவை சில முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல் நாள் முழுவதும் ஸ்மார்ட்போனை பயன்படுத்திக் கொண்டே இருப்பது, பேட்டரி அதிக நேரம் வேலை பார்த்தால் கூட உங்கள் போன் ஓவர் ஹீட் ஆகலாம். அதிக அளவில் ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்வது காரணமாகவும் பேட்டரி சூடாகலாம் என சொல்லப்படுகிறது.

அடிக்கடி போனை சார்ஜ் செய்வது, 100% நிறைந்த பிறகும் போனை சார்ஜிங்கில் அப்படியே வைப்பதும் கூட காரணமாக கூறப்படுகிறது.

சூரிய வெளிச்சத்தில் நேரடியாகப் படாதவாறு உங்கள் போனை வைத்துக் கொள்வது நல்லது. மேலும் ஆண்டி கிளாஸ் ஸ்கிரீன் ப்ரொடக்ஷனை பயன்படுத்தினால் சூரிய வெளிச்சத்தில் போன் உபயோகிக்கும் போது ஸ்கிரீன் பிரைட்னஸ்ஸை அதிகரிக்க வேண்டிய அவசியம் வராது.

போன் சூடாவதை தடுக்க முதல் போனில் இருக்கும் BACAKCASE யை கழட்டவேண்டும். போனின் ப்ளூடூத் (bluetooth) அம்சத்தை ஆப் செய்வதோடும் உங்கள் போனை Airplane mode-ல் வைத்துக்கொள்வது போனை குளிர்வுக்கும்படி செய்யும்.

Related News

Latest News