Friday, July 4, 2025

துணிவை தட்டி தூக்கிய வாரிசு! 3வது வாரத்தில் 300 கோடியை நெருங்கும் வசூல்

பொங்கலையொட்டி ஜனவரி 11ஆம் தேதி விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் வெளியானது.

விமர்சனங்களை தாண்டி இரு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. எனினும், முன்னதாக குறைவான திரைகள் ஒதுக்கப்பட்ட வாரிசு படத்திற்கு family audience demand அதிகமானதால், கூடுதல் திரைகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாட்டில் மட்டும் 126 கோடி வசூலை ஈட்டியுள்ள வாரிசு, உலகம் முழுவதும் 283 கோடி வசூலை குவித்து, 300 கோடியை வேகமாக நெருங்கி வருகிறது. மாஸ்டர் படத்தின் 142 கோடி வசூல் தான் தமிழ்நாட்டில் விஜயின் உச்சகட்ட வசூலாக பார்க்கப்படுகிறது.

இன்னும் 16 கோடி வருவாயின் மூலம் வாரிசு இந்த சாதனையை முறியடித்து விடும் வாய்ப்புகள் அதிகம். துணிவு திரைப்படத்தின் வசூலை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும், துணிவு தமிழ்நாட்டில் 108 கோடியும், உலக அளவில் 220 கோடியும் வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news