உடலில் உள்ள நச்சு கழிவுகள் வெளியேறாமல் இரத்தத்தில் சேரும் போது நாளடைவில் அவை சிறுநீரகத்திற்குள் கற்களாக மாறுகின்றன.
கற்களின் அளவை பொறுத்து அறிகுறிகளின் தீவிரம் வேறுபடும். உடலில் உள்ள கால்சியம், ஆக்சாலேட் மற்றும் யூரிக் அமிலத்தை நீர்த்து போக செய்ய தேவையான தண்ணீர் இல்லாத பட்சத்தில், சிறுநீரக கற்கள் உருவாகின்றன.
தீராத வயிற்றுவலி, சிறுநீரில் இரத்தம், குமட்டல், காய்ச்சல், சிறுநீரில் நுரை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஆகியவை சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.
உணவில் புரதம், சோடியம் மற்றும் சக்கரையை அதிக அளவில் எடுத்து கொள்வது, உடல் பருமன் மற்றும் போதுமான அளவு தண்ணீர் பருகாதது சிறுநீரக கற்கள் உருவாக காரணமாக அமைவதாக கூறும் மருத்துவர்கள், லேசான அறிகுறிகளின் போதே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டால் சிறுநீரக கல் பிரச்சினைக்கு சுலபமாக தீர்வு காணலாம் என கருத்து தெரிவிக்கின்றனர்.