பிரமிடு… இன்ட்ரஸ்ட்டிங் தகவல்கள்
- நினைவுச்சின்னங்களை அமைப்பதற்காகப் பிரமிடுகள் உருவாக்கப்பட்டன.
- நைல் ஆற்றங்கரையோரம் உருவாக்கப்பட்டுள்ள இந்த வகைப் பிரமிடுகள்
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை. - எகிப்து நாட்டின் தச்சூர் நகரிலுள்ள சிவப்பு நிற பிரமிடுதான் உலகின் முதல் பிரமிடு.
- பின்னர், மன்னர் கூபுவின் பிரமிடும் மிகப்பெரிய வடிவில் அமைக்கப்பட்டது. பழைய
ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக இன்றும் விளங்குவது கூபுவின் பிரமிடுதான். - சுண்ணக்கல்லால் ஆனது கூபுவின் பிரமிடு. இந்த சுண்ணக்கல் ஒருவிதப் படிவப்பாறை.
இது பழுப்பு மற்றும் சாம்பல் நிறம்கொண்டது. - பிரமிடின் உள்ளறைகள் சிவப்புக் கிரானைட் கற்களால் ஆனது.
- பெரி பிரமிடே உலகின் மிக உயரமான பிரமிடு. இதன் உயரம் 146.5மீட்டர். அதாவது,
488 அடி. சதுர வடிவிலுள்ள இந்தப் பிரமிடின் அகலம் 230 மீட்டர். அதாவது, 755 அடி. - பெரி பிரமிடு இரண்டரை டன்னிலிருந்து 15 டன் எடையுள்ள 13 லட்சம் கற்களைக்
கொண்டு 13 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. - சூடான் நாட்டில்தான் அதிக எண்ணிக்கையில் பிரமிடுகள் உள்ளன. 220 பிரமிடுகள்
இந்நாட்டில் உள்ளன. - நைஜீரியா, கிரீஷ், இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலும் பிரமிடுகள் உள்ளன.
- தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோவில், கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் ஐராவதேஸ்வரர்
கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில்களின் அமைப்பு பிரமிடைப்போல் உள்ளன.