Tuesday, December 23, 2025

இனி scaleவச்சி மாணவர்களை அடிக்க முடியாது!

சின்ன வயசுல இந்த scale வச்சி கோடு போட்டோமோ இல்லையோ. கணக்கு வாத்தியார் கையால நெறையபேர் அடிவாங்கி இருப்போம்.

கட்ட scale, கண்ணாடி scale, steel scaleனு எல்லாத்துலயும் அடி வாங்கியிருப்போம்.

ஆனா… இனிமே நம்மள அப்படி அடிக்க முடியாதுங்க. இந்த scale லும் இப்போ டிஜிட்டல்ல வந்துருச்சு..

உலகின் முதல் டிஜிட்டல் rulerஐ அறிமுகப்படுத்திருக்கு ROLLOVA’என்னும் நிறுவனம்.

வெறும் ஐந்து சென்டிமீட்டர்ல நம்ம கைக்குள் அடங்கும் வகையில் இந்த ruler-ஐ வடிவமைத்திருக்கிறது ROLLOVA’நிறுவனம்.

இதனை எந்த மேற்பரப்பிலும் உபயோகப்படுத்தும் வகையில் உருவாக்கியுள்ளோம் என்று கூறியுள்ளது இந்த நிறுவனம்.

பல வசதிகளுடன் இருக்கும் இந்த டிஜிட்டல் rulerல் அளவுகளைக்காண சிறிய display ஒன்றும் உள்ளது.

இந்த டிஜிட்டல் ruler மூலம் 83 அடி தூரம் வரையில் எடுக்க முடியும். தற்போது இந்திய மதிப்பில் ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டுவரும் இந்த gadget விரைவில் விலையேற்றப்படும் எனத் தெரிகிறது.

தற்போதைய காலத்தில் அனைத்தும் டிஜிட்டல் உலகிற்கு மாறிவரும் வேளையில் இந்தக் கண்டுபிடிப்பு மாணவர்களை மட்டுமன்றி அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கவைத்துள்ளது.

Related News

Latest News