ஜப்பானை சேர்ந்த A.L.I. Technologies என்னும் ட்ரோன் தொழில்நுட்ப நிறுவனம் XTurismo எனும் புதிய வகை பறக்கும் பைக் ஒன்றை அறிமுகப்படுத்திள்ளது.
இந்த பைக் 40 நிமிடங்களில் 100 கிலோ மீட்டர் வேகம் வரை பறக்கும் திறன் கொண்டது.
2022 ஆம் ஆண்டிற்குள் இதுமாதிரியான 200 பறக்கும் பைக்குகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
குறைந்த விலையில் இந்த பைக்கை விற்பனை செய்யவும் இந்நிறுவனம் முடிவுசெய்துள்ளது.
மக்கள் பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, கடல் சார்ந்த பேரிடர் காலங்களிலும் இந்த வகையான பைக்குகள் உதவும் என்று ஜப்பான் எம்பி ஒருவர் கூறியுள்ளார்.
இந்த ஹவோர் பைக்கின் சோதனை ஓட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.