பிறந்தது தமிழகம் ஆள்வது IT உலகம் – HCL முதலாளியின் கதை

297
hcl
Advertisement

1945 ஜூலை 14, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள முலைப்பொழி எனும் கிராமத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது யாருக்கும் தெரியவில்லை, அந்த ஆண் குழந்தை IT தொழில்நுட்பத்தில் அசுர வளர்ச்சி அடையும் என்று.

இந்த நவீன யுகத்தில் ஷிவ் நாடார் என்ற பெயரை பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இந்த நவீன யுகத்தில் HCL என்ற பெயரை அறியாதோர் இருக்கவும் வாய்ப்பில்லை .

யார் இந்த ஷிவ் நாடார்? இவருக்கும் HCL க்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்?

உலகம் பேசும் முன்னணி IT நிறுவனமான HCLஐ நிறுவுவியர் தான் இந்த ஷிவ் நாடார்.

ஷிவ் நாடார் தனது பள்ளிப்படிப்பை மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியிலும், இன்ஜினீரிங் பட்ட படிப்பை கோயம்பத்தூர் PSG கல்லுரியிலும் முடித்துள்ளார்.

சிறு வயதிலே தகவல் தொழில்நுட்ப துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் பின்னாட்களில் அதே துறையில் அசுர வளர்ச்சியடைந்து வெற்றியும் பெற்றார்.

Walchand group’s Cooper Engineering Ltd கம்பெனியில் தனது வெற்றி பயணத்தை தொடங்க வேலைக்கு சேர்ந்தார் .

ஒரு நிறுவனத்தை முழுமையாக வழிநடத்தும் அளவிற்கு அனுபவம் பெற்ற பிறகு, தனது வேலையை துறந்து, தனது புதிய பாதையை நோக்கி பயணப்பட ஆரம்பித்தார் .

தனது வளர்ச்சியை நோக்கி முதல் படி எடுத்து வைக்க, தனது நண்பர்கள் மற்றும் வணிக தோழர்களுடன் இணைந்து MICRO CROP என்ற நிறுவனத்தை தொடங்கி, டிஜிட்டல் கால்குலேட்டர் உற்பத்தி செய்து, அதனை இந்திய சந்தைகளில் வணிகம் செய்துவந்தார்.

1976 ஆம் ஆண்டு HCL நிறுவனத்தை வெறும் 1,87,000 ரூபாய்(ஒரு லட்சத்து எண்பத்தியேழுஆயிரம் ) முதலீட்டில் துவங்கினார். இன்று HCL நிறுவனத்தின் மதிப்பு 50 பில்லியன் டாலர் ஆகும். இது இந்திய மதிப்பின் படி 500 கோடி ஆகும் .

HCL நிறுவனத்தின் மொத்த வருவாயான 5.4 பில்லியன் டாலரில் ஆண்டுக்கு, 1 பில்லியன் டாலரை நிகர லாபமாகப் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

HCL நிறுவனமானது பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப சேவை மற்றும் ஆலோசனை நிறுவனமாகும். இது இந்தியாவை தலைமையகமாக கொண்டு உலகளவில் இயங்கும் பன்னாட்டு நிறுவனமாகும். இதன் தலைமையகம், இந்தியாவின் உத்தரபிரேதேச மாநிலம் நொய்டாவில் உள்ளது.

இந்த நிறுவனம் தகவல் தொழில்நுட்ப ஆலோசனைகள், தொலைதூர உட்கட்டமைப்பு வசதிகள், ஆய்வுசார் சேவைகள், போன்றவற்றை வழங்குகிறது. இது மட்டுமின்றி இராணுவம், மென்பொருள் உருவாக்கம், கொள்கலன் தயாரிப்பு, தொலைத் தொடர்பு சேவைகள், நுகர்வோர்க்கான மின்பொருட்கள் மற்றும் மருத்துவ சேவைகள் என பல துறைகளில் தனது பணியை திறம்பட செய்து வருகிறது.

1982 ஆம் ஆண்டு, HCL நிறுவனத்தின் முதல் கணினி வெளியிடப்பட்டது. HCL நிறுவனத்தின் படைப்புகள், இன்று உலகம் முழுவதும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. ஆசிய அளவில் ஐம்பது முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக HCL இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது .

ஷிவ் நாடார் தனது திறமை மற்றும் விடா முயற்சியால் HCL நிறுவனத்தை உலகம் முழுதும் எடுத்து சென்று, 45 நாடுகளில் தனது கிளைகளை திறந்து, ஆசியாவிலேயே முன்னணி மற்றும் முதல் தகவல் தொழிநுட்ப நிறுவனமாக HCL வெற்றிநடைபோட செய்து கொண்டிருக்கிறார்.

இந்திய தகவல் தொழில்நுட்ப துறையின் தந்தை என அழைக்கப்படும் ஷிவ் நாடார் குணத்திலும் மெண்மையானவர் தான். தனது ஊழியர்களுடன் தாராளமாகவும் இயல்பாகவும் பழகக்கூடியவர். இவரது நிறுவனத்தில் பணி புரியும் சிறந்த ஊழியர்களுக்கு மெர்சிடிஸ் பென்ஸ்(BENZ CAR ) கார் மற்றும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை எனப் பல சலுகைகளையும் தனது பணியாளர்களுக்கு வழங்கி வருகிறார்.

ஷிவ் நாடார் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து, உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்க உதவி செய்து வருகிறார். தனது தந்தை பெயரில் ,சென்னையில் SSN என்ற பெயரில் பொறியியல் கல்லுரி ஒன்றை ஆரம்பித்து, அதில் ஏழை மாணவர்களுக்கு கட்டணம் இல்லா கல்வியை அளித்து வருகிறார் .

தமிழ்நாட்டில் பிறந்து தகவல் தொழில் நுட்ப துறையில் சாதித்து, தகவல் தொழில் நுட்ப துறையின் தந்தை என அழைக்குமளவிற்கு வளர்ந்துள்ள ஷிவ் நாடாருக்கு, 2008ஆம் ஆண்டில், இந்திய அரசு, தகவல் தொழில்நுட்பத் துறையில் இவரின் மகத்தான பங்களிப்பிற்காக இந்தியாவின் மிக உயரிய விருதான “பத்ம பூஷன்” விருதை அளித்து கெளரவித்தது.

ஷிவ் நாடாரின் மகளான ரோஷினி நாடார் தான் தற்போது HCL நிறுவனத்தின் தலைவராக திறம்பட பணியாற்றி வருகிறார். ஷிவ் நாடார் தலைவர் பொறுப்பிலிருந்து விலகியிருந்தாலும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகத் தொடர்ந்து திறம்பட பணியாற்றி வருகிறார்.

தமிழகத்தில் பிறந்து தகவல் IT உலகையே ஆண்டு கொண்டிருக்கும் ஷிவ் நாடாருக்கு இது சமர்ப்பணம்.