சென்னை குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில், பெங்களூருவில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, குரோம்பேட்டை ஆய்வாளர் தலைமையிலான போலீசார் திருமலை சாலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின்போது இரண்டு கனரக வாகனங்களை பிடித்த போலீசார், அவற்றில் இருந்த 900 கிலோ எடையிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த பொருட்களின் மதிப்பு சுமார் ஏழு லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, குட்கா கடத்தலில் ஈடுபட்ட குரோம்பேட்டையை சேர்ந்த முருகன், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
