பொதுவாகவே பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்கள், ஏன் ஆசிரியர்களுக்கும் விடுமுறை என்றாலே அளவில்லாத மகிழ்ச்சி ஆனந்தம் தான். அதிலும் தொடர் விடுமுறை வந்துவிட்டால் சொல்லவா வேண்டும். இந்த நிலையில் கடந்த ஜூன் மற்றும் ஜூலையில் அரசு விடுமுறை இல்லாத காரணத்தால் மாணவர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர்,
அதன் பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகளுக்கு விடுமுறை கிடைத்ததால் ஒளரவு கொஞ்சம் நிம்மதியாக இருந்தனர். ,மேலும், வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி மிலாடி நபி வருவதையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறையாகும். அதன் பிறகு 6 முதல் 12 வகுப்பு வரை மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 15ம் தொடங்கி 26ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்..
இதனைத்தொடர்ந்து, செப்டம்பர் 27ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை என்று தெரிவித்துள்ளனர். வழக்கமாக ஒரு வாரம் விடுமுறை கிடைக்கும் நிலையில் இந்த முறை 9 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதில் ஆயுத பூஜை, விஜய தசமி மற்றும் காந்தி ஜெயந்தி என விடுமுறைகள் உள்ளடங்கும்.
இதனையடுத்து இன்னும் 4 மூன்று மாதங்களில் 2026 தொடங்கவுள்ள நிலையில் தற்போதே ஜனவரி மாதம் வரும் பொங்கலுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை கிடைக்க போகிறது என்று மாணவர்கள் காலண்டரை புரட்ட ஆரம்பித்துள்ளனர். இந்த முறை பொங்கலுக்கு 6 முதல் 9 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க போவதால் மாணவர்கள் இப்போதே துள்ளிக்குதித்து வருகின்றனர். அதாவது, ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு 4 நாட்கள் விடுமுறை மட்டுமே கிடைக்கும்.
2026ம் ஆண்டு ஜனவரி 14 புதன் கிழமை, தை பொங்கல், ஜனவரி 15 வியாழன் கிழமை திருவள்ளுவர் தினம், ஜனவரி 16 வெள்ளிக் கிழமை உழவர் திருநாள் வருகிறது. ஜனவரி 17 மற்றும் 18 வார விடுமுறை வந்துவிடுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாள் அதாவது ஜனவரி 13ம் தேதி செவ்வாய் கிழமை போகி என்பதால் அன்றைய தினம் அரசு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. அப்படி விடுமுறை அளிக்கும் பட்சத்தில் மொத்தம் 6 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.ஆகையால் பள்ளி மாணவர்களுக்கு குஷியில் துள்ளிக்குதித்து வருகின்றனர்.