ஒரே ஒரு தக்காளிச் செடியில் 839 தக்காளிப் பழங்கள்
விளைந்துள்ளது விவசாயிகளை மட்டுமன்றி,
அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கவைத்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் டக்ளஸ் ஸ்மித்.
இவர் தனது வீட்டுத் தோட்டத்தில் தக்காளிச்செடி
ஒன்றை நடவுசெய்து வளர்த்து வந்துள்ளார்.
வாரத்துக்கு மூன்றுமுதல் நான்கு மணிநேரம் வரை
இந்தச் செடியைப் பராமரிக்க நேரம் ஒதுக்கியுள்ளார்.
கண்ணும் கருத்துமாக அக்கறையோடு கவனித்து வந்ததால்,
தக்காளிச் செடியும் நன்கு வளர்ந்து அமோக விளைச்சலைத்
தந்துள்ளது.
அதாவது, 6 மாதங்களில் 839 பழங்களை விளைந்து
சாதனை புரிந்துள்ளது இந்த தக்காளிச் செடி.
இதற்குமுன் 448 பழங்கள் ஒரு செடியில் விளைந்ததே
கின்னஸ் சாதனையாக இருந்தது. தற்போது அந்தச் சாதனையை
முறியடித்துள்ளது டக்ளஸ் ஸ்மித் வளர்த்த தக்காளிச் செடி.