உத்தரகாண்ட் மாநிலத்தில் துறவிகள் வேடத்தில் திரிந்து பக்தர்களையும், பொது மக்களையும் ஏமாற்றிய பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
உத்தரகாண்ட் அரசு தொடங்கிய ‘ஆபரேஷன் காலனேமி’ என்ற பெயரில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கையின் கீழ் மொத்தம் 82 போலி சாமியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதுக்கள் மற்றும் துறவிகள் வேடத்தில் திரிந்து பக்தர்களையும், பொது மக்களையும் ஏமாற்றிய பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் மட்டும் 34 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.