Saturday, August 9, 2025
HTML tutorial

காதல் மோகத்தில் விழுந்து ரூ.8 கோடி இழந்த 80 வயது முதியவர்!

மும்பை : ஃபேஸ்புக்கில் 4 பெண்களிடம், காதல் வலையில் சிக்கி 80 வயது முதியவர் ஒருவர் 2 ஆண்டுகளில் ரூ.8.7 கோடி பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2023 – 2025 வரை முதியவர் 734 பணப் பரிமாற்றங்கள் செய்துள்ளார். இதற்காக மருமகளிடம் ரூ.2 லட்சமும், மகனிடம் ரூ.5 லட்சமும் கடன் பெற்றுள்ளார். இதை சந்தேகித்து மகன் போலீஸில் புகார் அளிக்க, தான் சைபர் மோசடியில் சிக்கி ஏமாந்துவிட்டோம் என முதியவர் அறிந்துள்ளார்.

ஜூலை 22 ஆம் தேதி, அந்த முதியவர் ‘1930’ என்ற சைபர் கிரைம் ஹெல்ப்லைனில் புகார் அளித்தார், ஆகஸ்ட் 6 ஆம் தேதி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். நான்கு பெண்களின் பெயர்கள் வந்துள்ளன, ஆனால் அனைத்து அடையாளங்களும் ஒரே நபருடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News