சீனாவுக்கு 80 ஆயிரம் கழுதைகள் ஏற்றுமதி

231
Advertisement

பின்னணி என்ன? சுவாரஸ்யமான தகவல்கள்….

ஏற்றுமதி என்று சொன்னவுடனே நமக்கு வியாபாரப்
பொருட்கள், விளைபொருட்கள்தான் நினைவுக்கு வரும்.
ஆனால், கழுதைகளை ஏற்றுமதி செய்வதைப் பற்றிக்
கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அதுவும் உலக வல்லரசாகத் துடிக்கும் சீனாவுக்குத்தான்
கழுதைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இந்த விசித்திரமான செயல் எங்கே நடைபெறுகிறது
தெரியுமா…… பாகிஸ்தானில்தான்.

உலகளவில் அதிக எண்ணிக்கையில் கழுதைகள் கொண்ட
மூன்றாவது நாடாகத் திகழ்கிறது பாகிஸ்தான். ஒவ்வோராண்டும்
பாகிஸ்தானிலிருந்து 80 ஆயிரம் கழுதைகள் சீனாவுக்கு ஏற்றுமதி
செய்யப்படுகின்றன.

இறைச்சித் தேவைக்காகவும் மருத்துவத் தேவைக்காகவும்
கழுதைகளை சீனா இறக்குமதி செய்கிறது. கழுதையின்
தோலிலிருந்து எடுக்கப்படும் ஜெலட்டின்மூலமாக பலவகை
மருந்துகள் சீனாவில் தயாரிக்கப்படுகிறது. இதனால் சீன
நிறுவனங்கள் கழுதைகளைக் கொள்முதல்செய்ய அதிகளவில்
முதலீடு செய்துள்ளன.

அதேபோல, பாகிஸ்தான் அரசும் கழுதை வளர்ப்பில் அதிக
முதலீடு செய்துள்ளது. கழுதை வளர்ப்பு மற்றும் சிகிச்சைக்கென்று
தனி மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த
மூன்றாண்டுகளில் ஆண்டுக்கு ஒரு லட்சம் என்னும் விகிதத்தில்
கழுதைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

சுமார் 56 லட்சம் கழுதைகள் பாகிஸ்தானில் உள்ளதாக அந்நாட்டின்
பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் ஒரு கழுதைத் தோல் 15 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம்
ரூபாய்க்கு விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.