30 நிமிஷத்துல ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டா 8.5 லட்சம் பரிசு

415
Advertisement

30 நிமிடங்களில் ஃபுல் மீல்ஸ் சாப்பிடுபவர்களுக்கு எட்டரை லட்ச ரூபாய் பரிசளிக்கப்படும் என்ற அறிவிப்பு பலரை ஈர்த்துவருகிறது.

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொருவிதமான உணவுகள் இருந்தாலும், அவற்றை உண்டு மகிழ்வதில் அனைவருக்கும் திருப்திதான். போதும் என்று சொல்வதும் உணவு ஒன்றைத்தான். ஆனாலும், அவ்வப்போது சாப்பிடும் போட்டி ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கிறது.

அந்த வகையில், சமீபத்தில் டெல்லியிலுள்ள உணவகம் ஒன்று சாப்பிடும் போட்டியை அறிவித்திருந்தது.

இந்தப் போட்டியில் 15 வகையான உணவுகள் உள்ளன. கபாப், டிக்காஸ் ஆகியவற்றுடன் டால் மக்னி, டம் ஆலு, ஆலு கோபி, ஷாஹி பனீர், கதி, கதாய் பனீர் உள்ளன. மேலும், பலவிதமான கிரேவிகளுடன் நாண், ரொட்டிகளும் உள்ளன. இதுதவிர, சாப்பாடு, பிரியாணியும் இருந்தது.

இரண்டு கிண்ணங்களில் குலாப் ஜாமுன், ஐந்துவகையான பானங்கள் ஆகியவையும் வைக்கப்பட்டன.

இத்தனை வகையான உணவுகளையும் 2பேர் சேர்ந்து 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடித்துவிட வேண்டும். சாப்பிட்டு முடிப்போருக்கு 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் அந்த ஓட்டல் நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பால் பலர் ஈர்க்கப்பட்டனர்.

என்றாலும், ஒரே நேரத்தில் இவ்வளவு சாப்பிடுவது இரைப்பைப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று சிலர் கருத்துத் தெரிவித்தனர்.