Friday, January 24, 2025

எத்தியோப்பியாவில், லாரி ஆற்றில் கவிழ்ந்து விபத்து – 71 பேர் பலி

எத்தியோப்பியாவில், லாரி ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 71 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தெற்கு எத்தியோப்பியாவின் சிடாமா பகுதியில் திருமண நிகழ்வுக்காக லாரி ஒன்றில் 70க்கும் மேற்பட்டோர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஆற்றுப்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது, ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, எதிர்பாராதவிதமாக ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 71 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சிலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest news