70 ஆண்டுகள் கழித்து கண்டெடுக்கப்பட்ட காதல் கடிதங்கள்!

435
Advertisement

70 ஆண்டுகள் கழித்து 2 பேட்டிகள் நிறைய கண்டெடுக்கப்பட்ட காதல் கடிதங்களும் அந்த கடிதத்தின் சொந்தக்காரர்களை கண்டுபிடித்த பெண்ணின் ஆவலும் தான் இந்த வீடியோவின் மையக்கரு.

அமெரிக்காவின் விர்ஜீனியா நகரில் உள்ள ஒரு பழமையான வீட்டை ANNA BIRLAMAN என்ற பெண் புதிதாக விலைக்கு வாங்கியுள்ளார்.

அந்த வீட்டில் ஒரு ரகசிய அறை இருக்கிறதை கண்ட ANNA சுத்தம் செய்யவதற்காக தாழ்ப்பாளை கழட்டி விட்டு உள்ள சென்றுள்ளார்.

அங்கு ஓர் ரகசிய இடம் இருந்ததை பார்த்து ஆர்வம் அடைந்த அப்பெண் அங்கு மறைத்து வைக்கப்பட்டிற்கும் இரண்டு பெட்டிகளையும் எடுத்து உள்ளே என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்த பின் தான் எதிர்பார்காத விதமாக அந்த பெட்டிக்குல் பல கடிதங்கள் இருப்பதை கண்டுள்ளார்.

மேலும் ஆராய்ந்த அவர் அந்த லெட்டர்கள் அனைத்தும் சாதாரண கடிதங்கள் அல்ல அவையனைத்தும் காதல் கடிதங்கள் என தெரிந்ததும் அதனை படிக்க ஆரம்பித்திருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

“காதல் கடிதங்கள், ‘Lol’,’Oh My God’போன்ற எந்த வார்த்தைகளையும் பார்க்க முடியவில்லை.

இலக்கணப்பூர்வமாக மிகச் சரியான வார்த்தைகள் மட்டுமே கடிதத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தது.

இந்தக் காதல் எப்படி இருந்திருக்கும்’’என்று ANNA உருகி தெரிவித்திருக்கிறார்.

அந்த பெட்டியில் இருந்த கடிதங்களைப் படித்து, அந்த கடிதங்களின் சொந்தக்காரர்களை தேடி கண்டுபிடிக்க முடிவு செய்யதார் ANNA.

மேலும் அவர் தெரிவிக்கையில் ஜான் மார்ஷல் என்ற பள்ளியில் WANS மற்றும் PETTY ஆகிய இருவரும் சந்தித்து ஒருவரை, ஒருவர் காதலித்துள்ளனர் என்று அந்த கடிதம் ஒன்றில் எழுதப்பட்டிருந்தது.

மேலும் அதில் “ஹாய் ஹனி. எனது குழந்தை எப்படி வளர்ந்து கொண்டிருக்கிறது.

நாம் பிரிந்திருக்கும் சமயங்களில், நான் உனக்காக சொல்லும் வார்த்தைகளை நினைவுகூர்ந்து வருகிறேன்.

ஆனால், நாம் ஒன்றாக இருக்கும் சமயத்தில் நான் நினைப்பது இதுதான்.அது ‘ஐ லவ் யூ’’!என்று எழுதியிருந்தது.

கண்டுபிடிக்கபட்ட கடிதங்கள் அனைத்தும் 70 ஆண்டுகள் பழமையானவை என்பதை ANNA தெரிவித்துள்ளார்.

பிறகு, இதன் உரிமையாளர்களை கண்டறிய விருப்பப்பட்ட அவர் இதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தேடலை ஆரம்பித்தார்.

ஒருவழியாக துப்பு கிடைத்தது 3,000 மைல்கள் தாண்டி போர்லாந்தில் உள்ள DALDEN என்பவரை ANNA கண்டுபிடித்தார்.

அப்போது வேன்ஸ் மற்றும் பெட்டி ஆகிய இருவருக்கும் இறுதியில் திருமணம் நடைபெற்று ஒற்றுமையாக வாழ்ந்தனர் என்பது ANNAவுக்கு தெரிய வந்தது.

இந்த கடிதங்கள் குறித்து DALDENகும் தெரிந்திருந்தது.

ஏனென்றால், அந்தக் காதல் ஜோடியே அவரது தாத்தா, பாட்டி தான். வேன்ஸ் – பெட்டி இருவரும், மரணத்தால் பிரியும் வரை 50 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்துள்ளார்கள்.

இந்த நிகழ்வை பலரும் மாறா படத்தோடு ஒப்பிட்டு தங்களது வாழ்க்கை துணையுடன் பகிர்ந்து ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.