கிறிஸ்துமஸ் மற்றும் வார இறுதிநாட்களை முன்னிட்டு 706 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துதுறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு விரைவுப்போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் மோகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வார இறுதிநாட்கள் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும், பிற இடங்களிலிருந்தும் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதன்படி கிளாம்பாக்கத்திலிருந்து இன்று 325 பேருந்துகளும், நாளை 280 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோயம்பேட்டிலிருந்து இன்றும், நாளையும் மொத்தம் 81 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.