Thursday, January 23, 2025

12 நாட்களில் 7 மாடி ஹோட்டல்…

பன்னிரண்டே நாட்களில் 7 மாடி ஹோட்டல் கட்டப்பட்டது
சாதனை நிகழ்வாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது-

சிரமமான செயல்களையெல்லாம் மிகச்சுலபமாக செய்துமுடிக்கிறது
சீனா. அந்த வகையில் கொரோனா பரவத் தொடங்கிய சமயத்தில்
ஒரே நாளில் 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் ஆயிரம் படுக்கைகள்
கொண்ட மருத்துவமனையைக் கட்டி சீனா சாதனை புரிந்திருந்தது.

தற்போது சீனாவின் ஜுஹாய் நகரில் சீன அரசின்
கட்டுமான நிறுவனத்தால் இந்த ஹோட்டல் கட்டப்பட்டுள்ளது
புதிய சாதனையாக அமைந்துள்ளது.

MAXIMAL INFORMATION COEFFICIENT என்னும்
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ஹோட்டல் கட்டப்பட்டுள்ளது.
இந்தத் தொழில்நுட்பம் தரமானதாகவும் துல்லியமானதாகவும்
உள்ளதென்று இந்த ஹோட்டலைக் கட்டிய நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தியதால் விரயங்கள்
குறைந்துள்ளதாகவும், குறைந்த எண்ணிக்கையில்
மனிதர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளது.

உதிரிபாகங்களை அசெம்பிள் செய்து சைக்கிளை உருவாக்குவதுபோல
இந்த ஹோட்டல் கட்டப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் கட்டப்பட்டுள்ளதால்
இந்தக் கட்டடத்தின் பாகங்களில் ஏதேனும் குறை ஏற்பட்டால்
அதனை உடனே கண்டறிந்து சரிசெய்துவிட முடியும்.

Latest news