Friday, March 21, 2025

மாணவனை கத்தி முனையில் மிரட்டிய வழக்கில் 7 பேர் கைது

மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்தவர் 25 வயதான ஆகாஷ் குப்தா, காஞ்சிபுரம் ஒரகடத்தில் குடியிருந்து, சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு ஒரகடம் மேம்பாலம் அருகே ஆகாஷ் குப்தா நடந்து செல்லும்போது, அவ்வழியாக காரில் வந்த கும்பல், ஆகாஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, கூகுள் பே மூலம் 10 ஆயிரம் ரூபாய் பணம், நகை போன்றவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றது. இதில் படுகாயமடைந்த ஆகாஷ், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் சம்பவத்தில் தொடர்புடைய திருநெல்வேலியை சேர்ந்த முத்துராஜா, பிரதீஷ், உதயகுமார், குருநாதன், பரசுராமன், மாரி செல்வம், சுபாஷ், உள்ளிட்ட 7 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Latest news